சிங்கம்புணரி: குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக். 4 ம் தேதி இரவு 10:05 மணிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இக்கோயிலில் 3 தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. பூமி தளத்தில் உள்ள சன்னதியில் உள்ள ஞான தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.