கூடலூர்: கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. தட்சணாமூர்த்திக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களது ராசிக்கேற்ப சிறப்பு வழிபாடு செய்தனர். குருபெயர்ச்சி பலன் குறித்து கோயில் அர்ச்சகர் விளக்கினார்.