ராமேஸ்வரம்:சபரி மலைக்கு பெண்கள் செல்ல அனுமதித்தை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய கோரி ராமேஸ்வரம் கோயிலில் அய்யப்ப பக்தர் அனந்தபத்மநாதன்,55, அங்கபிரதட்சணம் செய்தார். சென்னை அரசு வங்கியில் ஊழியராக பணிபுரியும் அனந்தபத்மநாதன், கடந்த 35 ஆண்டுகளாக ஐயப்ப பக்தராக உள்ளார். சமீபத்தில் சபரி மலைக்கு பெண்கள் செல்லஅனுமதிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய கோரி நேற்று ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில், உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோஷமிட்டப்படி அங்கபிரதட்சணம் செய்தார்.