பதிவு செய்த நாள்
07
அக்
2018
12:10
வத்திராயிருப்பு:தமிழகத்தில், நாளை மிக பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், சதுரகிரி மலையில், அமாவாசை வழிபாட்டிற்காக திறக்கப்படும் மலைப்பாதை, நான்கு நாட்களுக்கு திறக்கப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த சில நாட்களாக மழை பெய்துள்ளதால், சதுரகிரி மலைப்பகுதியில் ஆங்காங்கே நீரூற்று ஏற்பட்டுள்ளது. கடும் மழை பெய்தால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அரசு, ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளதால், நேற்று முதல், நான்கு நாட்களுக்கு திறக்கப்படுவதாக இருந்த, மலைப்பாதை திறக்கப்படாது. அமாவாசை வழிபாட்டிற்காக, பக்தர்கள் மலைக்கு வரவேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.