பதிவு செய்த நாள்
08
அக்
2018
12:10
திருப்பரங்குன்றம்;திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் கோயில்களில் அக்., 10 முதல் 19 வரை நவராத்திரி திருவிழா நடக்கிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்., 10 ராஜ ராஜேஸ்வரி, 11ல் நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், 12 ல் ஊஞ்சல், 13 ல் பட்டாபிஷேகம், 14 ல் திருக்கல்யாணம், 15 ல் தபசு, 16 ல் மகிஷாசுரவர்த்தினி, 17 ல் சிவ பூஜை, 18 ல் சரஸ்வதி பூஜை அலங்காரங்களில் விஷ்ணு துர்க்கை அம்மன் விசாக கொறடு மண்டபத்தில் அருள்பாலிப்பார். அக். 19 மாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் பசுமலை மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும்.
திருநகர் சித்தி விநாயகர் கோயில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலிலும் நவராத்திரி கொலு அலங்காரம் நடக்கிறது.