பதிவு செய்த நாள்
08
அக்
2018
02:10
நாமக்கல்:புரட்டாசி, மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர், பெரு மாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு விசேஷ தினத்தன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷே கம் நடக்கிறது. அதன்படி, நேற்று (அக்., 7ல்) புரட்டாசி, மூன்றாம் சனிக்கிழமையை முன்னி ட்டு, காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* நாமக்கல் அடுத்த, நைனாமலை, வரதராஜ பெருமாள் கோவிலில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மலை உச்சியில், 3,360 படிகளை கடந்து சென்று, நின்ற நிலையில், குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசித்தனர். மலையேற முடியாதவர்கள், அடிவாரத்தில், பெருமாளை நோக்கி வணங்கி நிற்கும் பக்த ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றனர்.
* மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு, விசேஷ அபி ேஷக அலங்கார ஆராதனை, மாலையில், கருடசேவை நடந்தது. சுவாமி, ருத்ர நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.