பதிவு செய்த நாள்
08
அக்
2018
02:10
தர்மபுரி: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த, செட்டிக்கரை பெருமாள் சுவாமி கோவிலில், நேற்று (அக்.,7,ல்) காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், சிறப்பு அபிேஷகம் நடந்தது.
காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. கோவில் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்கள் செய்து, வெள்ளிக்கவச அலங்காரம் சாத்தப்பட்டது.
இதேபோல், பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி கோவிலில், பகல், 12:00 மணிக்கு, மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. அதகபாடி லஷ்மி நாராயணசுவாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உட்பட, பல்வேறு பெருமாள் கோவில்களில், நேற்று (அக்.,7ல்) சிறப்பு பூஜை நடந்தது.