திருப்புவனம் வைகையில் மகாளய அமாவாசை வைகையில் குவிந்த மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2018 01:10
திருப்புவனம்:திருப்புவனம் வைகையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான வர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசை தினங்களில் இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுப்பது வழக்கம். தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது விசேஷம் என கருதப்படுகிறது. திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி கொடுப்பது காசியை விட, வீசம் பெரிது என கருதப்படுகிறது .
நேற்று 8ல் திருப்புவனம் வைகை ஆற்றில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மழை நீர் பெருக் கெடுத்து ஓடியதால் திதி கொடுக்க மக்கள் கூட்டம் காலை முதலே அதிகமாக காணப்பட்டது.
அதிகாலையில் வந்தவர்கள் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் ஆற்றினுள் திதி கொடுக்க தடை விதித்ததுடன் பக்தர்களை வைகை ஆற்றில் இருந்து வெளியேற்றி கரையிலேயே திதி கொடுக்க ஏற்பாடு செய்தனர்.