பதிவு செய்த நாள்
09
அக்
2018
02:10
திருப்பூர்:மஹாளய அமாவாசை தினமான நேற்று (அக்.,8ல்), திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.புரட்டாசி மாதம் வரும் அமாவாசை, மஹாளய அமாவாசையாக அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம், முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, சிவாலயங்கள் மற்றும் நீர்நிலை அருகே உள்ள விநாயகர் கோவில்களில், முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்து வழிபட்டனர்.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் உட்பட, பல்வேறு இடங்களில், தர்ப்பனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில்களில் அமாவாசை தின சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தன.குருபெயர்ச்சிக்கு பிறகு வரும் அமாவாசை என்பதால், அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.