பதிவு செய்த நாள்
09
அக்
2018
02:10
மேல்மருவத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி விழாவை, அகண்ட தீபம் ஏற்றி, பங்காரு அடிகளார் நேற்று (அக்., 8ல்) துவக்கி வைத்தார்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.காலை, 9:00 மணிக்கு, சித்தர் பீடம் வந்த, பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தன-ர். பகல், 12:30 மணிக்கு, கருவறையில், சுயம்பு அம்மன் முன் வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை, அவர் ஏற்றி வைத்தார்.நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள், தீபத்தில் எண்ணெய் விட்டு, தீப ஒளியை வழிபட்டனர். தமிழ் மந்திரங்கள் ஓதி, லட்சார்ச்சனை நடைபெற்றது. நவராத்திரி விழா, 19ம் தேதி வரை, நடைபெறுகிறது.
தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும்.விழாவில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், ஆதிபரா சக்தி ஆன்மிக இயக்கத்தின், சென்னை மாவட்ட சக்தி பீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.