பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி விழா, கொடியேற்றத்துடன் நாளை (அக்.,10ல்) துவங்குகிறது.
திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி உடனுறைவடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இங்கு ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இவ்வாண்டு, நவராத்திரி திருவிழா, நாளை (அக்.,10ல்) மாலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்றைய தினமே, வடிவுடையம்மன், தபசு அலங்கார உற்சவத்தில், மாடவீதி உலா நடை பெறும்.நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில், பராசக்தி, நந்தினி, கவுரி,பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மஹிஷாசுர மர்த்தினி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங் களில், அம்மன், மாடவீதி உலா நடைபெறும்.
பத்தாம் நாளான, 19ம் தேதி இரவு, கொடியிறக்கத்துடன், நவராத்திரி விழா நிறைவுறும்.