பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
மேட்டுப்பாளையம்:புஜங்கனூர் விநாயகா வித்யாலயா பள்ளியில் தேவாரம், திருவாசகம் ஒப்புவிக்கும் போட்டி நடந்தது; கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 50 பள்ளிகளில் இருந்து, 450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரேமா வரவேற்றார். பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி பேராசிரியர்கள், இசையாசிரியர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.அரசு பள்ளிகள் பிரிவில், 10 பேர், மெட்ரிக் பிரிவில், 9, சி.பி.எஸ்.இ., பிரிவில், 9 பேர் என, 28 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர். தாளாளர் சோமசுந்தரம் சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கு தேவாரம், திருவாசகம் திருவிழாவில் பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் பரிசு வழங்குவார். ஏற்பாடுகளை தமிழாசிரியர் வினோதினி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். தமிழாசிரியர் குமார் நன்றி கூறினார்.