அருப்புக்கோட்டை:திருச்சுழியில் குண்டாற்றில் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். காசி, ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பலன், இங்கு கொடுக்கும் போது ஏற்படுகிறது.
இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய வருவர். அமாவாசையான நேற்று முன்தினம் (அக்., 8ல்)குண்டாற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.