பதிவு செய்த நாள்
10
அக்
2018
12:10
திருப்புத்தூர்;திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் இன்று (அக்.,10ல்) முதல் நவராத்திரி விழா துவங்குகிறது.விழாவை முன்னிட்டு தினசரி மூலவருக்கு காலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறும். தினசரி அம்மனுக்கு கொலு அலங்காரம் நடைபெறும். இன்று (அக்.,10ல்) அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் நடைபெறும்.
நாளை (அக்.,11ல்) தட்சிணாமூர்த்தி அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன், ஊஞ்சல், பிட்டுக்கு மண் சுமந்து,தந்தைக்கு உபதேசம், தையல் நாயகி, மகிஷாசூரமர்த்தினி,சிவ பூஜை அலங்காரங்கள் நடைபெறும்.அக்.,16 ல் திருவிளக்கு பூஜையும், அக்.,10ல் இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தலுடன் விழா நிறைவடையும்.