Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ... திருத்தணி கோவிலில் நவராத்திரி விழா திருத்தணி கோவிலில் நவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2018
12:19

தெய்வங்களும் கடைப்பிடித்த நவராத்திரி நவராத்திரியின் மூன்றாம் நாளான நாளை, அம்பாளை, இந்திராணியாக வழிபாடு செய்ய வேண்டும். அம்பாள் இந்திராணி மாஹேந்திரி, சாம்ராஜ்யனி என்றும் அழைக்கப்படுகிறாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம், சூலம், கதாயுதம் தாங்கி, யானை வாகனத்தில் அமரும் வகையில் அலங்கரிக்க வேண்டும். ஆயிரம் கண்ணுடையவள், விருத்திராசுரனை அழித்தவள் என்பதால், தைரியமிக்கவளாய் கருதப்படுகிறாள்.சிவபிரான் தன் ஆனந்த தாண்டவத்தின் போது, இடது காலின் பெரு விரலால் போட்ட கோலம் தான் இன்று போட வேண்டும்.

அது அஷ்டவஷ் கோலம் என, சொல்லப்படுகிறது. அரிசி மாவுடன் செம்மண் கலந்து கோலமிட்டால், அம்பாள் அகம் மகிழ்வாள்.தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால், சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும், நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி. இவருடைய வலக்கை, சின்முத்திரை காட்டியபடி இருக்கும்.வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டி விரல், ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். தட்சிணாமூர்த்தி போல, உபதேசிக்கும் கோலத்தில் அம்பாளைக் காண்பவர்களுக்கு, அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.நாளை, மீனாட்சி அம்மன், கல்யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவாள்.

மகிஷாசுரனை வதைத்த அம்பிகையை, சூலத்துடன் மகிஷன் தலைமீது நிற்கும் கோலத்தில், வழிபட வேண்டும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புவோருக்கு, இவளின் அருட்பார்வை வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க, அருள் புரிபவளும் இந்த அன்னையே.முதல் இரண்டு நாட்களில், பூஜையை தவற விட்டவர்களும், இந்த மூன்றாம் நாளில், கொலு வைத்து, தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்கள் பாடி, சிறப்பு பூஜைகளை செய்து, பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் வழங்கி, இவ்விரதத்தை கொண்டாடுவது வழக்கம்.முதல் இரண்டு நாட்கள், தங்கள் வீட்டு பூஜையில் ஓய்வில்லாமல் இருந்தவர்கள் கூட, மூன்றாம் நாளான நாளை, நவராத்திரி விரதம் இருப்போர் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் கையால் தாம்பூலம் வாங்கி வருவதை, வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி செய்வதால், தேவி, இல்லம் தேடி வந்து குடியிருப்பாள் என்பது நம்பிக்கை.

மூன்றாம் நாள் வழிபாடு முறை
நைவேத்தியம்: எலுமிச்சை சாதம், வெண் பாயாசம்
மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி
பூஜை நேரம்: காலை 9:௦௦ - 10:30 மணி, மாலை 6:௦௦ - 7:30 மணி வரை முத்து வைத்து மலர் வகை கோலம் போட வேண்டும்.மொச்சைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் வினியோகிக்க வேண்டும்.

தாம்பூலங்கள்: 9 முதல் 11 வகை தரப்பட வேண்டும்

ராகம்: ஆனந்த பைரவிசிறப்பு: ஸ்ரீ இந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்.இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை கொண்டவள், வீரத்தின் தெய்வம், சிவப்பிரியை, இச்சா சக்தி.

பலன்: உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட, மூன்றாம் நாள் விரதம் இருத்தல் நலம். மாணவர்கள், இந்தக் கோலத்தை தரிசிப்பது, மிகவும் நல்லது.

நாளை மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். குமரகுருபரர் குழந்தையாக இருந்த போது, மூன்று வயது வரை பேச்சுத்திறன் அற்றவராக இருந்தார். பின்னர் திருச்செந்துார் முருகனருளால் குறை நீங்கப் பெற்றார். இதைக் கேள்விப்பட்ட மதுரை மன்னர் திருமலைநாயக்கர், அவரை மதுரைக்கு வரவழைத்தார். முருகனின் தாயான மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடும்படி கேட்டுக் கொண்டார். மீனாட்சிபிள்ளைத்தமிழைப் பாடிய குமரகுருபரர், ஊசல் பருவத்தில் அம்மன் ஊஞ்சலில் ஆடும் அழகையும், அவள் அருள்புரியும் தன்மையையும் வியந்து போற்றியுள்ளார். ஊஞ்சலில் ஆடும் மீனாட்சியை தரிசித்தால் கவலை தீரும்.  மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

நைவேத்யம்: தேங்காய்சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்

பாட வேண்டிய பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா நேற்று ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நான்கரைமணி ... மேலும்
 
temple
விழுப்புரம்:பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, ஏராளமான ... மேலும்
 
temple
சிவகங்கை: கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, தெப்ப குளத்தில் ... மேலும்
 
temple
பழநி: பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு , பழநி முருகன்கோயிலுக்கு சேலம் மாவட்ட பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.