1.சோமசுந்தரர் ஆலயம் இரண்டாவது சுற்றுப்புற நடுவில் எட்டடி உயரத்தில் 15 வரிகளை உடையது. அரசுக்குவரும் வரியை கோயிலின் செலவுக்கு அளிப்பதாக கொள்ளலாம். அனுமானம் : விக்கிர பாண்டியர் காலத்தியது.
2.ஓதுவார்களுக்கு திருமலை மன்னர் உவந்தளித்த மான்யங்கள் :
நிலஉடமை, செப்புப் பட்டயச் சான்று, நிலம் உள்ள இடம் - திருப்புவனத்தில் பத்துக் கல் தொலைவில் உள்ள செங்குளம் என்ற கிராமம் இதை ஓதுவார் செங்குளம் என்றே அழைக்கப்படுகிறது. ஜமீன் இனாம் ஒழிப்பு சட்டத்தில் இக்கிராமத்தில் இருந்து வரும் வருமானம் அற்றுப்போனதாக கூறுவது வித்வான். தா. குருசாமி ஓதுவார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கல்வெட்டுக்கள் உள்ள இடங்கள்
1.சுந்தரேஸ்வரர் கோயிலின் தென்புறச்சுவர் 2.சுந்தரேஸ்வரர் கோயிலின் கோபுரத்தூண் ஒன்று 3.இரண்டாம் கோபுரத்தின் கிழக்குப்புறச் சுவர் 4.மேற்குக் கோபுரத்தின் வடப்புறச்சுவர் 5.கிழக்குக் கோபுரத்தின் இரண்டாவது - பகுதியில் ஐந்து தூண்கள் 6.கம்பத்தடி மண்டபத்திலுள்ள சில தூண்கள் 7.புது மண்டபத்திற்கு அருகில் உள்ள கோபுரம் 8.இராச கோபுரத்தெருவிலுள்ள எழுகடல் தீர்த்தத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒருகல் 9.மூன்றாம் பிரகாரத்தில் மீனாட்சியம்மையார் கோயிலின் கிழக்குப்புறச்சுவர் 10. கூடலழகர் கோயில் கர்ப்பக்கிரஹ வடக்கு, மேற்கு, தெற்குப் புறச்சுவர்கள் அக்கோயிலின் மண்டபத்தின் தெற்குப்புறச்சவர் 11. மதன கோபாலசாமி கோயிலில் உள்ள பல தூண் கற்களிலும் உள்ளன. 12. மதுரை மாவட்ட ஆட்சியர் பங்களாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூண்
சுந்தரேஸ்வரர் கோயில் பழங்காலத்துப் பாண்டிய மன்னர்களுடைய கல்வெட்டுக்கள் இல்லை. பிற்காலத்துப் பாண்டிய மன்னர்களில் சடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்திகள் குலசேகர தேவர் கி.பி.1 190-1217 ஸ்ரீ கோமாற பன்மரான திரிபுவனச் சக்ரவர்த்திகள் சோணாடு கொண்டு முடி கொண்ட சோழபுரத்து வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியத்தேவர் கி.பி 1216-1235 கோசடைய பன்மரான திரிபுவனச் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரபாண்டியத் தேவர் காலங்களிலும், மதுரை நாயக்க மன்னர்களில் விசுவாத நாயக்கர் கி.பி. 1216-1235 கோசடைய பன்மரான திரிபுவனச் சக்ரவர்த்தி வீரபாண்டியத்தேவர் காலங்களிலும், மதுரை நாயக்க மன்னர்களின் விசுவாத நாயக்க கிருஷ்ணப்ப நாயக்கர் மகனார் வீரப்ப நாயக்கர் கி.பி 1572-95 திருமலை நாயக்கருக்கு முன்பு ஆண்ட வீரப்ப நாயக்கர் கி.பி 1609-1627 முத்து வீரப்ப நாயக்கர் கி.பி 1680-89 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் கி.பி 1705-31 இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இறைவனின் திருப்பெயர்
பாண்டிய மன்னருடைய கல்வெட்டுக்களில் இறைவன். திருவாலவாய நாயனார் என்றும். மதுரை நாயக்கர் கல்வெட்டில் சொக்கநாதசுவாமி என்றும் கூறப்பெற்றுள்ளார்.
இறைவியாரின் திருப்பெயர்
மதுரை நாயக்கருடைய கல்வெட்டில் இறைவியார் மீனாக்ஷி அம்மை என்று வழங்கப் பெற்றுள்ளார்.
மண்டபங்கள்:
கம்பத்தடி மண்டபம்: இம்மண்டபம் விசுவநாத நாயக்கர் மகனார் வீரப்ப நாயக்கரால் 1505 அதாவது கி.பி 1583 இல் கட்டப்பெற்றதாகும். இதை இம் மண்டபத்தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டால் அறியலாம் அதஉ 35 ஞஊ 1908. எனவே இம் மண்டபம் கட்டப் பெற்று இன்றைக்கு 380/485 ஆண்டுகளாகின்றன. இம்மண்டபத்தைப் பற்றி வீரப்ப நாயக்கரது செப்பேட்டு சாசனம் இர்ல்ல்ங்ழ் ல்ப்ஹற்ங் ஞ்ழ்ஹய்ற்ங் ஒன்றிலும் குறிக்கப்பட்டுள்ளது ஹய்ய்ன்ஹப் ழ்ங்ல்ர்ழ்ற் ச்ர்ழ் 1905-06 ல்ஹழ்ற் 2 ல்ஹழ்ஹ 60 இம்மண்டபத்தூண்களில் இத்தலத்துப் புராண வரலாறுகளைப் பற்றிய சித்திரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
நரலோக சூரியன் மண்டபம்:
இப்பெயருடைய மண்டபம் என்று கோயிலில் இருப்பதைத் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுத் தெரிவிக்கிறது அதஉ 40 ஊ 1905 அதில் மகேஸ்வரர் களுக்கு சிவனடியார்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டு வந்தது. அதன் பொருட்டு பாகனூர்க் கூற்றத்தில் நிலம் விடப்பெற்றிருந்தது.
புதுமண்டபம்:
இதில் மதுரை நாயக்கர் மன்னர்களுடையவும் அவர்கள் தேவியர்களுடையவும் உருவச் சிலைகள் இருக்கின்றன. சப்த சாகர தீர்த்தம் எழு கடல் தீர்த்தம் இது ராயக்கோபுரத் தெருவில் ஸ்ரீ சொக்கநாதர் சுவாமி முன்னாக இருக்கிறது. விஜயநகர அரசராகிய கிருஷ்ண தேவராயருடைய நன்கொடையாக சாளுவ நரச நாயக்க நாராயணனம் என்பவரால் சகம் 1438 அதாவது கி.பி 1516ல் வெட்டப்பெற்றது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
54. மதுரை திருக்கோயிற் கல்வெட்டுக்கள் »