இக்கோயிலின் மண்டபத்தின் தென்புறச்சுவர் கல்வெட்டு. இக்கோயிலின் கர்ப்ப இல் அர்த்த மண்டபம் இவைகளைக் கட்டுவதற்கு கருங்கற்கள் காந்தாடை அண்ணன் பொருட்டு, காந்தாடை கோணமானால் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கோயில் கட்டி முடிவு பெற்றது, எல்லப்ப நாயக்கர் அரசியல் அலுவலாளாராக இருந்த காலம் என்பதையும் குறிப்பிடுகிறது. மேலும் இக்கல்வெட்டு இராம இராசவிட்டல தேவமகா ராயரையும், அவருடைய உதவியாளர் வசவண்ண நாயக்க மகனார் திம்மப்ப நாயக்கரைப் பற்றியும் தெரிவிக்கிறது. கர்ப்ப இல்லின் வடக்கு மேற்கு, தெற்குப்புறச்சுவர்கள் கல்வெட்டு விசுவநாத நாயக்கர் திம்மப்ப நாயக்கரால் ஒரு வீடும் பொருளும் அளிக்கப்பெற்றதைக் கூறுகின்றது. மற்றொரு கல்வெட்டு விசயநகர மன்னன் வீரப்பிரதாபசதாசிவ மகாராயரால் சகம் 1473 அதாவது கி.பி 1551ல் கூடல் அழகிய பெருமானுக்குத் திருவமுது, திருவிழா இவைகளின் பொருட்டு மூன்று ஊர்கள் விடப்பட்டிருந்ததைக் கூறுகிறது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
54. மதுரை திருக்கோயிற் கல்வெட்டுக்கள் »