பதிவு செய்த நாள்
13
அக்
2018
01:10
திருப்பூர்:ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்ப பக்த ஜனசங்கம் சார்பில், காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில், 5ம் ஆண்டு நவராத்திரி கொலு விழா துவங்கியுள்ளது.கொலு வழிபாடு, பஜனை
பாடல்களை தொடர்ந்து, மாலை, 6:30 மணி முதல், 8:00 மணி வரை, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் நாளில், கவிநயா நாட்டியாலயா குழுவினரின் பாரத நாட்டிய நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் (அக்., 11ல்), கைரலி வித்யாலயா மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
நேற்று (அக்., 12ல்), ராஜன் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. இன்று (அக்., 13ல்), பிரகதீஸ்வரா நாட்டியாலயாவின், பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்க உள்ளது. வரும், 18 ல் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 19ம் தேதி காலை, 5:30 மணி முதல், வித்யாரம்ப நிகழ்ச்சியும், தொடர்ந்து கேரள நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.