பொள்ளாச்சி:நவராத்திரி விழாவையொட்டி, பொள்ளாச்சி பகுதியிலுள்ள குடியிருப்புகளில் நவராத்திரி விழாவை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பல்வேறு அமைப்புகள் சார்பில், கோவில்கள், மண்டபங்களில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
வாசவி மஹாலில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில், பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா ஆசிரியர் கீதா பிரகாஷ் மாணவியர் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த விழாவில், மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.