கரூர்: அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரசார சபா, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில பொதுச் செயலாளர் வெங்கடேஷன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதில், கேரளா மாநிலம், சபரிமலைக்கு, 10 வயது முதல், 50 வயதுடைய பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில், 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.