கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், அமைதி ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கிளை சார்பில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய வலியுறுத்தி, அமைதி பேரணி நடந்தது. லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பச்சை நாச்சியம்மன் கோவிலில் துவங்கிய பேரணி, கரூர் - திருச்சி சாலை வழியாக, சிவன் கோவில் வளாகத்தில் முடிந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.