மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. அம்மனும், சுவாமியும் காலையில் இருமுறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தில் சுற்றி அருள்பாலித்தனர். முதன்முறையாக கோயில் சார்பில், இரவு 7 மணிக்கு, மைய மண்டபத்திலிருந்து லேசர் ஒளியில் சுவாமியின் லீலைகள் குறித்த காட்சிகள், இயற்கை காட்சியும் நடைபெற்றது.