பதிவு செய்த நாள்
08
பிப்
2012
11:02
கோலாலம்பூர்: மலேசியாவில் தைப்பூச திருவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மலேசியாவில் வசிக்கும் எட்டு சதவீத இந்தியர்களில், பெரும்பாலோர் தமிழர்கள். இவர்கள், தைப்பூசத்தை ஒவ்வோராண்டும், பக்தி சிரத்தையோடு கொண்டாடி வருகின்றனர். இங்குள்ள பத்துகுகை முருகன் கோவிலில், ஆயிரக்கணக்கான இந்துக்கள் காவடி சுமந்தும், அலகு குத்திக்கொண்டும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இன்னும் பலர், ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.தைப்பூச திருவிழாவை, மலேசிய அரசு, தேசிய விடுமுறையாகவே அறிவித்துள்ளது. இந்திய சமூகத்தவருடனான பரஸ்பர உறவு மூலம், மேலும் முன்னேற்றத்தைக் காணமுடியும் என குறிப்பிட்ட, மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், பத்து குகை பகுதியில், இந்திய கலாசார மையம் அமைக்க, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.