சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு குழிகள் மூடப்பட்டன
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2018 12:10
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில், தமிழக தொல்லியல் துறை மூலம் நடத்தப்பட்ட அகழாய்வு குழிகளை மூடும் பணி நேற்று (அக்., 15ல்)நடந்தது.
கீழடியில் ஏப்.,18ல் நான்காம் கட்ட அகழாய்வு துவங்கி செப்., 30ல் நிறைவு பெற்றது. இதில் தங்க அணிகலன்கள், பானை ஓடுகள், மனித முகம் கொண்ட அச்சுகள், உறைகிணறு உள்ளிட்ட 5,820 பொருட்கள் கண்டறியப்பட்டன. ஆய்வு நடந்த குழிகளை அமைச்சர் பாண்டிய ராஜன், தொல்லியல்துறை இயக்குனர் உதயச்சந்திரன், இணை இயக்குனர் சிவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் அக்., 13 ல் பார்வையிட்டனர். கணேசன், சோணை ஆகியோரது நிலங்களில் 34 குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அவற்றை மூடும் பணி நேற்று (அக்., 15ல்) நடந்தது. அகழாய்வுக்காக பயன்படுத்தப்படும் கருவிகளையும் அதிகாரிகள் எடுத்து சென்றனர்.மத்திய தொல்லியல் வாரிய அனுமதி கிடைத்தவுடன் ஐந்தாம் கட்ட அகழாய்வு துவங்கும்.