பதிவு செய்த நாள்
16
அக்
2018
12:10
குன்னூர்: குன்னூர் அருவங்காடு டி.எஸ்.சி., குடியிருப்பு அருகே அமைந்துள்ள துர்க்கையம் மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது.
குன்னூர் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலைக்கு உட்பட்ட டி.எஸ்.சி., குடியிருப்பு அருகே அமைந்துள்ள துர்க்கையம்மன் கோவிலில், இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த, 9ல் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்து வருகிறது.முக்கிய நிகழ்ச்சியாக, 18ல், கோவிலில், தசரா விழா மற்றும் துர்க்கை பூஜை நடக்கிறது. விழாவில், காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை, ஆகியவை நடக்கின்றன. இதில், சிறுமியர் தெய்வீக அலங்காரங்களில் அமர வைத்து தெய்வங்களாக வழிபடும் சிறப்பு பூஜைகள் மற்றும் மகிஷாசுரனை வதம் செய்யும் அம்புசேவை நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் குழுவின் மரகதம், விஜி, வேதா உட்பட பக்தர்கள் செய்து வருகின்றனர்.