கோவை: ஷீரடி சாய்பாபா மகாசமாதி நுாற்றாண்டையொட்டி, கோவை நாகசாயி மந்திரில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அகமது மாவட்டம் ஷீரடியில் சாய்பாபா, 1918ல் மகாசமாதியடைந்தார். அவரது நினைவாக அவர் சென்ற இடங்களுக்கெல்லாம், அவரது பாதுகைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக, எடுத்து செல்லப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன், கோவையில் ஷீரடி சாய்பாபாவின் பாதுகைகள்,பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள நாகசாயி மந்திரில்,இன்று பாபாவுக்கு, சிறப்பு ஹாரத்தி நடைபெறுகிறது.வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில், பாபா பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சாய்பாபா கோவிலை ஒட்டி அமைந்துள்ள விஜய்தீப் திருமணமண்டபத்தில், நுாற்றாண்டு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.