புதுச்சேரி: தங்கத் தேரில் மணக்குள விநாயகர் வீதியுலா, இன்று மாலை நடக்கிறது.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், விஜயதசமியன்று மட்டும், ஆண்டுக்கு ஒருமுறை, தங்கத் தேரில் மணக்குள விநாயகர் வீதியுலா செல்வது வழக்கம். இதன்படி, விஜயதசமியான இன்று மாலை 6:30 மணியளவில், மணக்குள விநாயகர் உற்சவர் தங்கத் தேரில் மாட வீதிகளில் வலம்வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீதியுலாவின்போது சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.