பழநி: ஷீரடி சாய்பாபா நூறாவது ஸித்தி தினத்தை முன்னிட்டு, பழநி திருவள்ளுவர் சாலையில் உள்ள சத்யசாய் சதனில் சாய் பாபா கோயிலில் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.
சத்சரிதம் அகண்ட பாராயணம், கூட்டு பிரார்த்தனை வழிபாடு நடந்தது.பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல பழநி - கொடைக்கானல் ரோட்டில் உள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது.