Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 66. ஸ்வார்த்தம் சத் சங்கம்
ஸ்வார்த்தம் சத் சங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2018
01:10

67. ஸ்வார்த்தம் சத் சங்கம்
ஸ்வார்த்தம் சத் சங்கம்
(மஹரிஷி ஸ்ரீ பதஞ்ஜலி யோக கேந்திரம்)

அது என்ன ஸ்வார்த்தம் சத் சங்கம்..............?
ஸ்வார்த்தம் பற்றிய ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு அருளுரை

எது ஒருவனுக்கு நன்மை தருகிறதோ அதுவே ஸ்வார்த்தம் உண்மையில் ஒருவனுக்கு நன்மை புரிவது மோட்சமேயாகும். இந்த பொருளில் ஸ்வார்த்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டியது. இந்த மோட்சத்தை விட்டு விட்டு ஸ்வார்த்தம் என்பது பணம், பெயர், பதவி, சம்பாதித்தல் என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டு அதன் காரணமாகவே உலக போகங்களில் முயற்சி செய்கின்றனர். இதுஒரு பெரிய தவறாகும்.

ஸ்வார்த்த விஷயத்தில் ஏமாறுபவன் மூர்க்கன் என்று ஆதிசங்கரர் கூறுகிறார். நாமெல்லாம் ஸ்வார்த்த விஷயத்தில் ஏமாந்து கொண்டேயிருக்கிறோம். இந்த மனித உடல் பணமும் பதவியும் சம்பாதிப்பதற்காக கிடைக்கவில்லை. இதனை வைத்து மோட்சத்தை அடைவதற்கே கிடைத்துள்ளது. துக்கமாகிய சமுத்திரத்தை கடப்பதற்கு அந்த மனித உடலைத் தோணிபோல பயன்படுத்த வேண்டும் என்பார் பெரியோர். மிருகங்களுக்கு மோட்ச ஞானத்தை அடையும் தகுதியோ யோக்யதையோ இல்லை. மனிதன் ஒருவனுக்கும் மட்டும் உடலையும், இந்திரியங்களையும், மனதையும் வைத்துக் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் உயர்வு பெறுவதற்கு தகுதி உண்டு. விவேகி இவ்வரிய மானிட வாழ்க்கையினை மோட்சம் அடைய பயன்படுத்துவான். அவிவேகி அதியல்பமான போகங்களில் இவ்வாழ்வை வீணாக்கி விடுவான். கோவிலின் கோபுரம் உயரமாக இருப்பது நாம் அதன் கீழே எவ்வளவு தாழ்ந்து இருக்கிறோம் என்பதை உணர்த்தவே.

அகங்காரத்தை விட்டுவிடுவதே மோட்ச மார்க்கமாகும். மனிதன் சாதிக்க வேண்டிய முதல் சாதனை அகங்காரத்தினை விட்டு விடுவதே. எல்லாம் அறியும் கடவுள் நாம் செய்வதனைத்தும் அறிவார். ஸ்வார்த்தம் என்ற சொல்லுக்கு உண்மையான விளக்கம். மனிதன் தனக்குத் தானே நன்மை செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். மனிதன் ஞானம் என்ற பேரறிவை அடைவதே தனக்குத்தானே செய்து கொள்ளும் பெரும் நன்மையாகும். மற்ற உயிர்கள் அடைய முடியாத இறைத்தன்மையை அடையக்கூடியவர்களாக மனிதர்கள் உள்ளனர். அந்த இறைத்தன்மையை அடைய ஸ்ரீ பதஞ்ஜலியின் யோகம் வழிகாட்டுகிறது. அந்த யோக அறிவியலின் தந்தையான சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மஹரிஷி அவர்களின் அருளாசியுடன் குருஜி டி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மானுடர் உடல், மன, ஆன்ம நலம் பேணுவதை இலக்காக கொண்ட இயக்கம் ஸ்வார்த்தம் சத் சங்கம்.

1985 ஆம் ஆண்டு முதல் தென்னகத்தில் ஆலயப்பணி, யோகப் பயிற்சி பணி இரண்டையுமே எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் மேற்கொள்ளும் இயக்கமாக ஸ்வார்த்தம் சத்சங்கம் விளங்குகிறது. நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் ஆன்மீகப் பணியை தொடர்ந்து ஆற்றிக் கொண்டு வருகிறது.

இணையதள முகவரி:
www.maharishipathanjali.com

முகநூல் பக்கம்:
தமிழில் https://www.facebook.com/onlyspritual
in English
httpas://www.faceboo.com/voice of pathanjali

ஸ்வார்த்தம் சத்சங்க முகவரி :
ஆச்சாரியார். டி.எஸ்.கிருஷ்ணன்
நிறுவனர், ஸ்வார்த்தம் சத்சங்கம்
பிளாட் எண் 2, சபரி நகர்,
மாடக்குளம் மெயின் ரோடு,
பழங்காநத்தம் மேற்கு
மதுரை -625 003
Email : swarthamsathsangam@gmail.com

தொடர்புக்கு:
மு.கமலக்கண்ணன் M.Sc.M.Phil. (Yoga)., PGDy.D.Co.op
சிவ.உதயகுமார் B.Sc (yoga) D.E.E.E, D.y.s
ph: 9344937539, 9789300607

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar