பதிவு செய்த நாள்
22
அக்
2018
02:10
* அக்.20 ஐப்பசி 3: ஏகாதசி விரதம், துளசி கவுரி விரதம், பேயாழ்வார் திருநட்சத்திரம், தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் 1033வது பிறந்தநாள்.
* அக்.21 ஐப்பசி 4: மதுரை கள்ளழகர் நூபுர கங்கைக்கு எழுந்தருளி எண்ணெய்க்காப்பு உற்ஸவம், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம், கண்ணூறு கழிக்க நல்லநாள்.
* அக்.22 ஐப்பசி 5: பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் பஞ்சரத்ன பூஜை, நாங்குனேரி உலகநாயகி வருஷாபிஷேகம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* அக்.23 ஐப்பசி 6: இரவு 10:27 மணி முதல் கிரிவலம் வருதல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், கரிநாள்.
* அக்.24 ஐப்பசி 7: பவுர்ணமி விரதம், சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம், இரவு 11:01 மணி வரை கிரிவலம் வருதல், சந்தான கோபால விரதம், திருமூல நாயனார் குருபூஜை, திருநெல்வேலி காந்திமதியம்மன் புஷ்பாஞ்சலி, கோமதி பூஜை, சங்கரன்கோவில், தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி கோயில்களில் அம்மனுக்கு உற்ஸவம் ஆரம்பம்.
* அக்.25 ஐப்பசி 8: நெடுமாற நாயனார் குருபூஜை, திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரம், இரவு கமலவாகனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, சுவாமிமலை முருகன் தங்கக்கவசத்துடன் வைரவேல் தரிசனம்.
* அக்.26 ஐப்பசி 9: கார்த்திகை விரதம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் சிறப்பு அபிஷேகம், இடங்கழி நாயனார் குருபூஜை, தூத்துக்குடி பாகம்பிரியாள் வீதி உலா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் ரிஷப வாகனம்.