பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
பெத்தநாயக்கன்பாளையம்: கும்பாபிஷேகத்தின் ஆறாம் ஆண்டு விழாவையொட்டி, சக்தி மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்ட வாடி, சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் ஆறாம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு பூஜை நேற்று (அக்., 23ல்) நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகம் முன், ஏத்தாப்பூர் ஜெகதீஸ் சிவாச்சாரியார் முன்னிலையில், யாகம் நடந்தது. மதியம், 2:30 மணிக்கு மேல், மூலவருக்கு பழ வகைகள், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. விழாவை யொட்டி, மூலவர், உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.