பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்களில், நேற்று (அக்., 23ல்) உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உதவி கமிஷனர் மேனகா தலைமையில், கோவில் பணியாளர்கள், சேவா சங்கத்தினர் இணைந்து, உண்டியல் காணிக்கையை எண்ணினர்.இதில், விஸ்வேஸ்வரர் கோவிலில், ஐந்து லட்சத்து, 45 ஆயிரத்து, 564 ரூபாய் காணிக்கையும், 4.2 கிராம் தங்கமும், 8 கிராம் வெள்ளியும் இருந்தது. வீரராகவப்பெருமாள் கோவிலில், ஏழு லட்சத்து, 02 ஆயிரத்து, 920 ரூபாய் காணிக்கை; 10.34 கிராம் தங்கம்; 12.470 கிராம் வெள்ளியையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.