விழுப்புரம் : விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் அணையா விளக்கு ஏற்றப்பட்டது.விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், அணையா விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி, நேற்று (அக்., 23ல்) மாலை 6:00 மணிக்கு நடந்தது. ரெயின்போ நிறுவன மேலாண் இயக்குனர் ரகுநாதன், 5 அடி உயர விளக்கில் தீபம் ஏற்றி வைத்தார்.இந்து அறநிலையத்துறை அதிகாரி ஜோதி, நளினி சில்க்ஸ் உரிமையாளர் சீனுவாசன், கோவில் அர்ச்சகர் பத்மநாபன் உடனிருந்தனர்.