பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
விழுப்புரம் : விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு ஆதிவாலீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.திருக்கோவிலூர்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு‚ பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு‚ மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம்‚ அலங்காரம்‚ 5:30 மணிக்கு நந்திகேஸ்வரர்க்கு பால்‚ தயிர்‚ பஞ்சாமிர்தம்‚ இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம்‚ அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க வீரட்டானேஸ்வரர்‚ நந்திகேஸ்வரர்க்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை, பக்தர்களின் ஸ்ரீ ருத்ரம்‚ திருவாசகம் முழங்க சுவாமி ஆலய வலம் வந்தது.விக்கிரவாண்டி
புவனேஸ்வரர் உடனுறை புவனேஸ்வரி அம்மன் கோவில், பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில், தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்தீஸ்வரர் அருகம் புல், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப் பட்டு மகா தீப ஆராதனை நடந்தது.கண்டாச்சிபு
ராமாநாதீஸ்வரர் கோவிலில், பிரகார மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதீஸ்வரருக்கும்,நந்தித் தேவருக்கும் சிறப்பு தீபாரதனை நடந்தது. பின்னர் பிரதோஷமூர்த்தி திருத்தல இசைக்குழுவினரின் இசையுடன் கோவிலின் உட்பிர காரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்