பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூரில் நடைபெறும்அகழாய்வு, ஒரு வாரத்தில் முடியும், என, தொல்லியல் துறை கமிஷனர்உதயச்சந்திரன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூரில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில், இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடக்கிறது.இதுகுறித்து, அத்துறையின் கமிஷனர், உதயச் சந்திரன் அளித்த பேட்டி:பட்டறைப்பெரும்புதூரில், மழையின் காரணமாக, இடையில் அகழாய் வுப் பணி தடைபட்டது. தற்போது,அகழாய்வு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. அனேகமாக, இன்னும் ஒரு வாரத்தில் அப்பணிமுடியும்.கீழடியில், அகழாய்வுப் பணிகள் முடிந்து, தொல் பொருட்களை ஆவணப் படுத்தும் பணி நடக்கிறது.
கபா என்னும், மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின், இந்த ஆண்டு கூட்டத்திற்கு பின் தான், கீழடியின் அடுத்த கட்ட அகழாய்வுக்கான அனுமதி குறித்து தெரிய வரும். இவ்வாறு, அவர் கூறினார்.