தஞ்சை பெரிய கோவிலில் 1000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2018 06:10
தஞ்சை: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூலவர் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தாலும், 550 கிலோ காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் எனப்படும், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி மிகப்பிரமாண்டமாக அன்னாபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். இவரது மகன் ராஜேந்திரசோழன், (கி.பி. 1012-1044) ஆட்சி காலத்தில், கங்கை கரை வரை படையெடுத்து சென்று வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினான். கங்கை கொண்ட சோழபுரத்திலும் மிகப்பெரிய அளவில் அன்னாபிஷேகம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.