பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பா.ஜ., சார்பில் ராஜராஜசோழன் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.தமிழகத்தை ஆண்ட பேரரசர்களுள் புகழ் மிக்கவர் ராஜராஜ சோழன். அவரின் பிறந்த நாள் விழாவை தமிழக பா.ஜ., கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது.இந்தாண்டு, 1033வது பிறந்த நாள் விழா, நகர பா.ஜ.,வின் தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. காந்தி சிலை அருகே ராஜராஜ சோழனின் உருவப்படம் வைத்து, மரியாதை செய்யப்பட்டது. ஆன்மிகத்துக்கும், தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து நினைவு கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பா.ஜ., நகர தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.