சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடந்தது.
நேற்று (அக்.,24ல்) காலை 10:00 மணிக்கு திருக்கொடுங்குன்ற நாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னம், காய்கனிகளை கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர், அரளிப்பாறை சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று (அக்., 24ல்) மூலவருக்கு அன்னா பிேஷகம் நடந்தது. திருத்தளிநாதர் மூலருக்கு நேற்று (அக்.,24ல்) காலை 11:00 மணிக்கு திரவியங்களால் அபிேஷகம் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவருக்கு வெண்ணெய் சார்த்தி அன்னாபிேஷகம் நடந்தது. பின்னர் பழங்கள், காய்கறிகள் மூலவருக்கு முன் படைக்கப்பட்டது.
அன்னம் எடுத்துச் செல்லப்பட்டு சீதளி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டது. மாலையில் மேலத்திருத்தளிநாதர் கோயில் மூலவருக்கு அன்னாபிேஷகம் நடந்தது.