பதிவு செய்த நாள்
25
அக்
2018
03:10
மதுரை: மதுரை டி.கல்லுப்பட்டியில்ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா அக்.,30ல் துவங்கி நவ.,1 ல் நிறைவடைகிறது. ஆந்திராவிலிருந்து 600 ஆண்டுகளுக்கு முன் ஒரு மூதாட்டி 6 பெண் குழந்தைகளை காவடியில் சுமந்தவாறுடி.கல்லுப்பட்டி வந்தார். ஊர் தலைவர், மக்கள் உபசரித்து பாதுகாத்தனர். மக்களின் வறுமை, நோய் நீங்கியது.
மூதாட்டி மற்றும் குழந்தைகள், நாங்கள் தெய்வீக பிறவிகள். பூலோகத்தில் கடமைகள் முடிந்ததால் புறப்படுகிறோம். தீக்குளிக்கிறோம். ஏழு கிராமங்களில் ஆதிபராசக்தியின் வடிவமாக புகுவோம். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறப்போம். மக்களின் குறைகளை தீர்ப்போம், என்றனர்.
இதன் நினைவாக கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசியில் கொண்டாடப்படுகிறது. முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டி- சரஸ்வதி, வன்னிவேலம்பட்டி-மகாலட்சுமி, வை.அம்மாபட்டி- பைரவி, காடனேரி-திரிபுரசுந்தரி, கிளாங்குளம்-சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர். ஏழூர் அம்மன் திருவிழா அக்.,30 ல் துவங்குகிறது.
அம்மாபட்டி தவிர, மற்ற கிராமங்களில் சப்பரங்கள் வடிவமைக்கும் பணி துவங்கியுள்ளது. நவ.,1ல் காலை கல்லுப்பட்டி உட்பட 6 கிராமங்களிலிருந்து சப்பரங்களை பக்தர்கள் தலையில் சுமந்து, அம்மாபட்டிக்கு கொண்டுவருவர்.ஏழு அம்மன்கள் தோன்றி அருள் பாலிப்பர். பின் அவரவர் ஊர்களுக்கு சப்பரங்களை சுமந்து செல்வர்.