பதிவு செய்த நாள்
26
அக்
2018
12:10
எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையம், ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையம் அண்ணாநகரில் உள்ள ஆதிநாகஅருளீஸ்வரர், கருணாம்பிகை தாயார் கோவிலில், நேற்று முன்தினம் (அக்., 24ல்) அன்னாபிஷேக விழா நடந்தது.
காலை, 9:00 முதல் 10:00 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். காலை, 11:00 மணிக்கு மகா அபிஷேகம், 11:30க்கு மகா தீபாராதனை, மாலை, 4:00 மணிக்கு உற்சவர் வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.