ராஜாபாளையத்தில் புனிதம் காக்க பக்தர்கள் அமைதி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2018 12:10
ராஜபாளையம்: சபரிமலை நீதிமன்ற தீர்ப்பை முறு பரிசீலனை செய்ய வேண்டியும், கோயில் புனிதத்தை சீர் குலைக்க நடந்து வரும் சூழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராஜபாளையத்தில் சொக்கர் கோயில் ஐயப்ப பக்தர் குழு சார்பாக அமைதி ஊர்வலம் நடந்தது.
சபரி மலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பக்தர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சொக்கர் கோயிலில் இருந்து சஞ்சீவி மலை அடிவாரத்தில் உள்ள மலை முந்தல் விநாயகர் கோயில் வரை, சரண கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். 300 க்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.