திண்டிவனம் தீவனூர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2018 11:10
திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், சங்கட ஹர சதுர்த்தியை முன்னி ட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள தீவனூரில் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவில் நேற்றுமுன்தினம் (அக்., 27ல்) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நந்தது.
விழாவையொட்டி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு 108 சங்காபிஷேக மும் நடந்தது.இதன் தொடர்ச்சியாக இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.