திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக நாமார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2018 11:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக சகசர நாமார்ச்சனை நடந்தது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ உலக நன்மைக் காகவும்‚ மழை பொழிந்து‚ பயிர்கள் செழிக்கவும் வேண்டி‚சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று (அக்., 29ல்)காலை 8:00 மணிக்கு பெருமாள் சன்னதியில் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் சகசர நாமார்ச்சனையை துவக்கி வைத்தார்.இதில்‚ வேத விற்பன்னர்கள் பலரும் கலந்து கொண்டு‚ சகசர நாம பாராயணம் செய்தனர். தொடர்ந்து வசந்த மண்டபம்‚ ஜீயர் மடம் மற்றும் ஜீயர் சிறப்பிடம் ஆகிய இடங்களில் நாமார்ச்சனை செய்யப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.