பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
தென்காசி:தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் திருவுருவ சிலைகள் பிரதிஷ்டை நடந்தது.தென்காசி ஆய்க்குடி ரோட்டில் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் பஸ்ஸ்டாப் அருகில் ஷீரடி சாய்பாபா கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஷீரடி சாய்பாபா, பாதம், நந்தி, அன்னபூரணி திருவுருவ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு முதல் நாள் இரவு முதலாம் கால யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.இரண்டாம் நாளான நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதன் பின்னர் திருவுருவ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம், ஆரத்தி நடந்தது. மதிய ஆரத்திக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆரத்தி, இரவு ஆரத்தி நடந்தது. சிறப்பு பூஜை வழிபாட்டை மதுரை மகாதேவன் சுவாமிகள் நடத்தினார்.விழாவில் சுப்புலட்சுமி துரைசாமி கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளை சேர்மன் துரைசாமி, சுப்புலட்சுமி துரைசாமி, பழனியப்பன், லோகநாதன், குமார், மூத்த வக்கீல் எஸ்.கே.நாராயணன், ரவிசங்கர், பழனியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.