பதிவு செய்த நாள்
31
அக்
2018
12:10
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், எஸ்.ஆர்.டி கார்னர் பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன், 38; இவரின் மனைவி சரோஜினி, நேற்று முன்தினம் (அக்., 29ல்) சில்வர் குடத்தை கழுவி, தண்ணீர் பிடித்துள்ளார். இன்னொரு குடத்தில் ஊற்றியபின், குடத்தின் உள் பகுதியில், நீளமான இலை வடிவில் வண்ணம் இருந்துள்ளது. வெளியே எடுத்து வந்து பார்த்தபோது, பாபாவின் முகம் போல் இருந்துள்ளது. முருகேசன் மொபைல்போனில் படம் பிடித்து, பிரின்ட் போட்டார். அதிலும் பாபாவின் முகம் தெரிந்ததாக, செய்தி பரவியது. அக்கம்பக்கத்தினர் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர். இதனால் குடத்தை, பூஜை அறையில் வைத்து, வழிபாடு நடத்தி வருகிறார்.