திண்டுக்கல்லில் கிறிஸ்துவ ஆலயத்தை சீரமைக்க நிதியுதவி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2018 12:10
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கிறிஸ்துவ ஆலயங்களை சீரமைக்கும் பணிக்கு அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.சொந்த கட்டடங்களில் இயங் கும் கிறிஸ்துவ ஆலயங்களை சீரமைக்க அரசு நிதி வழங்குகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருக்க வேண்டும். ஆலயம் கட்டப்பட்ட இடம், ஆலயத்தை பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். சீரமைக்கும் பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித உதவியும் பெற்றிருக்க கூடாது. ஒரு முறை நிதி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம், சான்றிதழ் இணையத்தில் (தீதீதீ.ஞஞிட்ஞஞிட்தீ@tண.ஞ்ணிதி.டிண) வெளியிடப்பட்டுள்ளது. நிதியுதவி பெற விரும்புபவர்கள் ஆவணங்களுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். நிதியுதவி இரு தவணைகளாக ஆலயத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படும், என கலெக்டர் தெரிவித்தார்.