பழநி, : பழநி முருகன் கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒருநாள் (நவ.,2ல்) நிறுத்தப்படுகிறது.
பழநி முருகன்கோயிலில் நாள்தோறும் ரோப்கார் காலை 7:00மணி முதல் இரவு 9:00மணி வரை இயக்கப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஒரு மாதமும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒருநாளும் நிறுத்தப்படுவது வழக்கம். நாளை (நவ.,2ல்) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் நிறுத்தப்படுகிறது. கம்பிவடம், உருளைகளில் ஆயில், கிரீஸ் போட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்தபின் நவ.,3 முதல் ரோப்கார் வழக்கம் போல இயக்கப்படும் என இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.