பதிவு செய்த நாள்
01
நவ
2018
05:11
தசா’ங்கம் குக்குலூபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்
தூபம் தாஸ்யாமி தேவேச ’ ச ’பரீச ’ க்ருஹாண போ
தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நினா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் ச ’பரீச ’நமோஸஸ்துதே
தீபம் தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)
நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.)
ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, மேற்கண்ட மந்திரம் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி, கீழே விடவேண்டும்.)
தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)
தேவஸவித: ப்ரஸுவ (காலையில்)
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
ருதம் த்வா ஸத்யேன பரிஷஞ்சாமி (மாலையில்)
தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
சால்யோதனம் பாயஸம் ச மத்வபூப ஸமன்விதம்
நைவேத்யம் ப்ரதிக்ருஹ்ணீஷ்வ
நானாபக்வான்ன ஸம்யுதம்
சா ’ல்யன்னம், க்ருதகுள பாயஸம், லட்டுகம்,
மாஷாபூபம், குடாபூபம், சணகம், நாளிகேரகண்டம், கதலீபலம்,
பானகம், பஞ்சாம்ருதம்,
(மேலே குறிப்பிட்ட எந்தெந்த நைவேத்தியங்கள் நிவேதனம் செய்கிறீர்களோ அந்தந்த நைவேத்தியங்களின் பெயரைச் சொல்லி நிவேதனம் செய்யவும்.)
பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமினே நம:
சா ’ல்யன்னம், பாயஸம், நாளிகேர கண்டம், கதலீபலம்,
க்ருதாபூபம், ஸர்வம் அம்ருதம் மஹா நைவேத்யம் ஸமர்ப்பயாமி
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்)
அம்ருதாபிதானமஸி
உத்தராபோச ’னம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்)
நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)
பூகீ பல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம்
கர்ப்பூரசூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை தெளித்து நைவேத்யம் செய்யவும்.)
நீராஜனம் ஸுமாங்கல்யம் ஸர்வமங்கள காரணம்
க்ருஹாண பரயா பக்த்யா சார்பிதம் தே ’சி வாத்மஜ
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்.)
கர்ப்பூர நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
ஜாதீ சம்பக புன்னாக மல்லிகா வகுளாதிபி:
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி ச ’பரீச ’க்ருஹாண போ
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசு’மான்
பவதி சந்த்ரமாவா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான்
பசு’மான் பவதி
பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத ஹரிஹர புத்ர
ஸ்வாமினே நம: வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(விளக்கின் பாதத்தில் புஷ்பங்களைப் போடவும்.)
யானி கானிச பாபானி ஜன்மான்தர க்ருதானி ச
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
ப்ரக்ருஷ்ட பாபநாசா’ய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் பரஸீத த்வம் ஸுரோத்தம
பூதனாத ஸதானந்த ஸர்வபூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சா ’ஸ்த்ரே துப்யம் நமோ நம:
பூர்ணா புஷ்கலாம்பாஸமேத ஹரிஹர புத்ர ஸ்வாமினே நம:
ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(என்று நமஸ்காரம் செய்யவும்.)
ராஜ உபசாரங்கள்
(ஸ்வாமியை மகிழ்வித்து மரியாதை செய்வதற்காக சத்ரம், சாமரம் முதலிய உபசாரங்களை செய்கிறோம். இந்த உபசாரங்களுக்கு பதிலாக புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கலாம்.)
ச்சத்ரம் ஸமர்ப்பயாமி (குடை அளித்தல்)
சாமரம் வீஜயாமி (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜனம் ஸமர்ப்பயாமி (விசிறியால் வீசுதல்)
கீதம் ஸமர்ப்பயாமி (பாட்டுப் பாடுதல்)
வாத்யம் ஸமர்ப்பயாமி (வாத்யம் வாசித்தல்)
ந்ருத்யம் ஸமர்ப்பயாமி (நடனம் புரிதல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி (ஊஞ்சலில் ஆட்டுதல்)
ஸமஸ்த ராஜோபசாரான் தேவோபசாரான் ஸமர்ப்பயாமி
ப்ரார்த்தனை
(ப்ரார்த்தனை செய்து, புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ஆவாஹனம் நஜானாமி நஜானாமி விஸர்ஜனம்
பூஜா விதிம் நஜானாமி க்ஷமஸ்வ த்வம் ஸுரோத்தம
கரசரணக்ருதம் வா கர்ம வாக்காயஜம் வா
ச் ’ரவண நயனஜம் வா மானஸம் வா (அ) பராதம்
விஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சா’ஸ்தா
அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ மாம் சபரீச் ’வர
நமஸ்கார ஸ்லோகங்கள்
லோகவீரம் மஹாபூஜ்யம் ஸர்வரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயானந்தம் சா’ஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(நமஸ்காரம் செய்யவும்.)
விப்ரபூஜ்யம் விச் ’வ வந்த்யம் விஷ்ணு ச ’ம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ரப்ரஸாத நிரதம் சா’ஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(நமஸ்காரம் செய்யவும்.)
மத்தமாதங்க கமனம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வவிக்னஹரம் தேவம் சா’ஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(நமஸ்காரம் செய்யவும்.)
அஸ்மத் குலேச் ’வரம் தேவம், அஸ்மத்ச்சத்ரு விநாச ’னம்
அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம் சா ’ஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(நமஸ்காரம் செய்யவும்.)
பாண்ட்யேச ’வம்ச ’ திலகம் கேரளே, கேளி விக்ரஹம்
ஆர்த்த த்ராண பரம் தேவம் சா’ஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(நமஸ்காரம் செய்யவும்.)
பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சா ’ஸ்த்ரே துப்யம் நமோ நம:
(நமஸ்காரம் செய்யவும்.)
க்ஷமா ப்ரார்த்தனா/ அர்க்யம்
(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்தி படுத்தும் செயலாகும்)
(பின்வரும் மந்திரங்களை சொல்லி, கையில் புஷ்பம், அக்ஷதை தீர்த்தம் சேர்த்து விளக்கின் பாதத்தில் விடவும்.)
யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம்
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேச் ’வர
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே
அனயா பூஜயா ஹரிஹரபுத்ர: ப்ரீயதாம்
ஸ்ரீவிக்னேச் ’வர: ப்ரீயதாம்
ஸ்ரீமஹாச ’க்தி: ப்ரீயதாம்
மங்கள ஆரத்தி
ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி
ஓம் ஸ்ரீஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய என தினம் பாடிப்பணிந்தோம்
ஜகமெங்கும் அமைதியைத்தா ஓம் ஸ்ரீஜெய
திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவை யெல்லாம் அடைய (மறைய)
அம்மம்மா தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாடி உருகிட
பணிப்பாய் அன்பிலெம்மை ஓம் ஸ்ரீஜெய
இரண்டுகள் போக மூன்றுகள் அகல
ஈசுவரி வரமருள்வாய்
அம்மம்மா ஈசுவரி வரமருள்வாய்
கரங்குவித்தோம் இனிகாலை விடோமடி
கருணையுடன் அணைப்பாய் ஓம் ஸ்ரீஜெய
காசினிலெங்கும் வேற்றுமை போகக்
கருத்தினில் அன்பருள்வாய்
அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்
தேசுடன் வாழக் காட்டடி காட்சி
தேவியுடன் அடைக்கலமே ஓம் ஸ்ரீஜெய
நமஸ்காரம் திருவினை கருத்தினில்
ஞான நல்லொளி தீபம் வைத்து
ஞான நல்லொளி தீபம் வைத்து
நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்
ஞாலத்திர்க் கமைதியைத்தா ஓம் ஸ்ரீஜெய
ஓம் கணபதிஸாயி ஷண்முகநாதா
ஓம் த்ரிகுணாதீத க்ருஷ்ணா
ஐயப்பா ஓம் த்ரிகுணாதீத க்ருஷ்ணா
ஓம் ஸ்ரீராம மஹாதேவ சம்போ
ஓம் ஜெய ஜெகத்ஜெனனி ஓம் ஸ்ரீஜெய
நித்ய சுப மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதி சக்தி அம்பிகைக்கு அநந்த கோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் எந்தன் ஈச்வரிக்கு மங்களம்
இச்சையாவும் ஊட்டுவிக்கும் சிற்சுவைக்கு மங்களம்
உருகாத நெஞ்சம் உன்பால் உருகிற்ற உருக்கத்தாலும்
பெருகாத கண்ணீர் ஆறாய் பெருகிற்ற பெருக்கால் முன்னம்
சருகாத ஞானம் பூத்து தழைத்தின்பக் கனியாய்க்காண
பருகாத மதுரத்தேனை பருகினேன் பயன் பெற்றேனே
எப்பிறப்பும் எய்தேனோ இயற்கையான ஸித்தியை
இப்பிறப்பில் என் கரத்திசைந்தளிக்கும் சக்தியாம்
பஞ்ச பூத பேதமாய்ப் ப்ரபஞ்சமாய் ப்ரசண்டமாய்
விஞ்சினாள் எனக்கு யோக வீரளத்த தன்மையால்
தாழ்விலாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியிற் கசிந்தலித்துப் பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கு அநேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்தியற்கையான ஸித்தியை
தந்து ஞான மூர்த்தியாய்த் தணித்து வைக்கும் சக்தியாம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இனபம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞான தீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று ஸந்ததம் கொண்டாடுவோம் (அன்னை அன்னை)
ச ’ங்க ஜல ப்ரோக்ஷண மந்த்ரம்
இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே, ச ’ங்கை ஜலத்துடன் மூன்று தடவை ஸ்வாமியின் முன்பு சுற்றி, தன்னையும், எல்லோரையும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.
ச ’ங்கமத்ய ஸ்திதம் தோயம்
ப்ராமிதம் தைவதோபரி
அங்க லக்னம் மனுஷ்யாணாம்
ப்ரஹ்ம ஹத்யாவ்யபோஹனம்
புனர் பூஜை/ யதாஸ்த்தானம்
ஸபரிவார பூர்ணா புஷ்களாம்பிகா ஸமேத ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஸ்வாமின: ஸ்ரீ பராச ’க்த்யை நம: ஸ்ரீமஹாகணபதயே நம
அஸ்மாத் தீபஜ்யோதி மண்டலாத் யதாஸ்த்தானம்
ப்ரதிஷ்டாபயாமி சோ ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச
என்று சொல்லி அக்ஷதை, புஷ்பம், தீர்த்தம் இவைகளை விளக்குகளில் போட்டு விளக்குகளை வடக்கே நகர்த்தவும்.