பதிவு செய்த நாள்
11
பிப்
2012
11:02
சாத்தூர்:சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடிகாணிக்கை செலுத்தி, தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், நேற்று தை மாத கடைசி வெள்ளி திருவிழா நடந்தது. இதில் அம்மன் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் என, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. விருதுநகர், மதுரை , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பக்தர்கள், பாதயாத்திரை, கார், வேன், லாரிகளில் வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை, பொங்கல், மாவிளக்கு, கயிறுகுத்தி, அக்னி சட்டிஏந்தி, நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை ,கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் எம்.ராமமூர்த்திபூஜாரி, உதவி ஆணையர் மாரிமுத்து செய்திருந்தனர். விழாவையொட்டி ,இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.