திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் நடந்ததைலக்காப்பு - திருக்கல்யாணம் உற்சவம் நிறைவடைந்தது.கடந்த பிப்.5ம் தேதி ஆண்டாள் பெரிய சன்னதியில் எழுந்தருளி பெரிய பெருமாளிடம் விடைபெற தைலக்காப்பு-திருக்கல்யாணம் உற்சவம் துவங்கியது.நேற்று முன்தினம் காலை பெருமாள் திருக்கல்யாணம் மண்டபத்திற்கு எழுந்தருளி பெரியாழ்வாரை எதிர்கொண்டு அழைத்து வந்தார். மாலை 4 மணிக்கு ஆண்டாள் திருவீதி புறப்பாடு நடந்தது. ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய சவுமிய நாராயணப்பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.